திருந்துமா பதிவுலகம்?
தமிழ் பதிவுலகம் வளர்ந்துக்கிட்டே இருக்கும் சமயத்தில், தினமும் பல புதிய பதிவர்கள் எழுத வந்துக் கொண்டிருக்கும் வேளையில், போட்டி அதிகமாகிக் கொண்டே போகும் நேரத்தில், **** காலத்தில், &&&&& கணத்தில், த்தில், தில் ல் ஸப்பா….. புதிய பதிவர்களுக்கு சில டிப்ஸ். அவ்ளோதாங்க விஷயம். சில பேரு இந்த வாரப் பதிவர் போடறாரு. அப்ப நாம என்ன செய்யலாம்னு யோசிச்சதில் உருவானது இந்த அரிய பதிவு. வகுப்புக்கு போகலாமா நண்பர்களே?

முதல் ஸ்டெப்.(நாம என்ன கணக்கா போடறோம்?) பேரு வைக்கிறது. உங்க உண்மையான பெயரிலே வெற்றிக்கான கீ, அதாங்க சாவி இருப்பதாக நீங்கள் நினைத்தால் அந்தப் பெயரையே வைத்துக் கொள்ளலாம். அல்லது புனைபெயர் யோசிக்க வேண்டும். வலையுலகம் ஒரு கடல். அதில் நீந்த கற்றுக் கொள்ள வேண்டுமென்று நினைக்காமல் ஹாயாக பரிசல் ஓட்டி ஜெயித்தவர் பரிசல்காரன். அதே போல் நீங்களும் கட்டுமரக்காரன், மோட்டர் போட்காரன் என்று பெயர் வைத்துக் கொள்ளலாம். பரிசல் எல்லாம் ஜுஜுபி. என் டார்கெட்டே வேற என்று நினைப்பவர்கள் ஸ்பீடு போட்காரன், அல்லது அவரவர் டார்கெட்டுக்கு ஏற்ப டைட்டானிக் வரைக்கும் பெயர் வைத்துக் கொள்ளலாம்.தமிழ் 3000 வருட பழைமையான மொழி. அதற்கென ஒரு வைப்ரேஷன் உன்டு. எனவே முட்டாள் முருகேசன், லூஸ் மோகன் போன்ற பெயர்களை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் அதுவாகவே மாறக்கூடும்.வலைப்பூவின் பெயருக்கும் இது பொருந்தும்
நீங்கள் நகைச்சுவை திலகமா? காமெடி சும்மா காவிரி(கர்நாடகவில்) மாதிரி கரைபுரண்டு ஓடுமா? அப்ப பேரு வைப்பதில் சில சிக்கலுங்கோவ். ஏற்கனவே குசும்பன், நையாண்டி நைனா, குறும்பன்னு எல்லா பேரும் ரெஜிஸ்டர் செய்யப்பட்டுவிட்டது. கவலை வேண்டாம். சில்மிஷ சித்தப்பா, நக்கலு நடராஜு, கிச்சு கிச்சு கிரண், என்று பல பெயர்கள் என்வசம் இருக்கு. உங்க பேரை சொன்னா, சரியான அடைமொழியோடு நானே நாமகரணம் சூட்டுவேன்.
நீங்கள் மற்றவர்களை கலாய்க்க போகிறீர்கள் என்றால் மட்டுமே மேலே சொன்ன பெயர்கள். மற்றவர்களால் கலாய்க்கப்பட போகிறீர்கள் என்றால் வேறு சில பெயர்கள் உண்டு. உப்பு, சீனி, கறிவேப்பிலை என்பது போன்ற பெயர்கள் எளிதில் மற்றவர்கள் மனதில் ”சிக்கிட்டாண்டா ஒருத்தன்” என்ற நம்பிக்கையை தரும் என்று வரலாறு சொல்கிறது .
பேரு வச்சாச்சு? கடைக்கு வருபவர்களுக்கு சோறு வைக்கனும் இல்ல? அதாங்க பதிவு. என்ன எழுதலாம்? முதல் பதிவாக பிரபல, மூத்த,(அடைப்புக் குறிக்குள் ‘ர’ போட்டுக்கலாம்)பதிவர்களை திட்டி ஒரு பதிவு போடலாம். அல்லது, அப்போது வெளியாகும் ஏதாவது ஒரு படத்தை பொதுபுத்தியின் பார்வையில் இல்லாமல் வித்தியாசமாக யோசித்துப் பதிவு போடலாம். இதனால் நீங்கள் அறிவு ஜீவியாகவோ, அல்லது குறைந்தபட்சம் அறிவு மணிரத்னமாகவோ அடையாளம் காணப்படுவீர்கள். அப்புறம் என்ன? வித்தவுட்டில் நிற்கும் ரஜினி, ஆபாச நடிகர் சல்மான் கானின் அந்தரங்கம் என்று ஏதாவது கேள்வி கேட்கும் பதிவுகளாக போட்டு பிழைத்துக் கொள்ளலாம்.
எதுவுமே எழுத இல்லையா? அல்லது கோர்வையாக எழுத வரவில்லையா? கவலை வேண்டாம். இருக்கவே இருக்கு கலந்து கட்டி அடிக்கும் பதிவுகள். அவியல், காக்டெயில், கொத்து பரோட்டா, மிக்ஸ்ட் ஊறுகாய், கூட்டாஞ்சோறு போன்ற டைப் பதிவுகள் எழுதி காலத்தை ஓட்டலாம். ஜூவியில் இதை படிச்சேன். விஜய் டிவியில் அதைப் பார்த்தேன். நிலாவில் தண்ணி இருக்காம், அண்டார்டிக்காவிலும் ஊழல் இருக்காம்ன்னு நாலு மேட்டர கலக்கிட்டு, கடைசியா இவன் கவிதையை படிச்சேங்க. அட்டகாசம்ன்னு அடுத்தவன் கவிதை போட்டு முடிச்சிடலாம். நீங்க விக்ரம் ரசிகர் என்றால் தூள் என்றும் போடலாம். வருபவன் எல்லாம் கவிதை நல்லா இருக்குன்னு டைப் பண்ண சோம்பேறித்தனப்பட்டு, நல்லா இருக்குன்னு மட்டும் போடுவாங்க. இந்த மாதிரி பதிவுக்கு பேரு தான் ரொம்ப முக்கியம். இப்ப டிமாண்ட் கூட. பயப்படாதிங்க. அதுக்கும் எங்கிட்ட சரக்கு இருக்கு. ”சைனா சரக்கும் சில சைடிஷ்களும்”, ”தொகையறாவும், பல்லவியும், சரணமும்” , ”நச்சுன்னு நாலு மேட்டர்” இப்படி பல இருக்குங்க.
என்ன எழுதியும் பிரபலமாக முடியலையா? இருக்கவே சமூகம். உங்க கோவத்தையெல்லாம் காட்ட வழியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் குறித்து கிறுக்கலாம். சண்முகத்தை கேள்வி கேட்கலாம். எங்கெல்லாம் பிரச்சினை வருகிறதோ அதற்கு நாமதான் விடிவெள்ளி என நாமே நினைத்துக் கொன்டும் தீர்வெழுதலாம். எனக்கு ரீமா சென் பிடிப்பதில்லை, அமர்த்தியா சென்னையே பிடிக்கும். எனக்கு கவுண்டமணி சத்தம் பிடிக்கும் அளவிற்கு கோவில்மணி சத்தம் பிடிக்காது என ஏதாவது சொல்லலாம்.
எழுதும் போது பல பிரச்சினை வரும். (பல பேருக்கு எழுதுறதே பிரச்சினைதான்). அதில் முக்கியமானது ஸ்பெல்லிங் மிஸ்டேக். ”புண்ணியவான்”ன்னு போன பதிவுல சரியா எழுதி இருப்பிங்க. அடுத்த பதிவுல “புன்னியவான்” அப்படின்னு தெரியாம போட்டுடுவீங்க. யாராவது வந்து ”நேத்து சரியா எழுதின. இன்னைக்கு ஏன் குழப்பம்னு?” கேட்பாங்க. உடனே அசராம, இன்னைக்கும் “புண்ணியவான்” ன்னு எழுதினா இவன் ஒரே மாதிரி எழுதறான்னு சொல்லுவாங்க. அதான் டிஃப்ரென்ஸ் காட்றேன்னு சொல்லி சமாளிக்க தெரியனும். அது இல்லன்னா பின்னூட்டம் மட்டுமே போட்டு சூடு ஏத்துற ஜிமெயில் ஜின்னா, ஹாட்மெயில் அர்னால்ட் டைப் ஆளுங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கனும்.
அவ்ளோதானான்னு கேட்காதிங்க. இப்படி ஆரம்பிங்க. அப்புறம் நீங்களும் என்னை மாதிரி அட்வைஸ் அயயசாமியா மாறிடுவீங்க.ஆல் தி பெஸ்ட்.
பி.கு: தலைப்பு சம்பந்தமே இல்லாம இருக்கான்னு யோசிக்காதிங்க. இதுவும் ஒரு பழைய டெக்னிக் தான்.உங்களுக்கு சொல்லிக் கொடுக்கத்தான் அப்படி வச்சேன் அடிச்சு ஆடுங்க பாஸ்.
No comments:
Post a Comment